குழந்தைகளுக்கு மாலையில் செய்து தர சுவையான காளான் போண்டா…!!!
என்ன உங்க குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு விட்டுடாங்களா..? அப்பறம் என்ன பசங்க தினமும் மாலையில் ஸ்நாக்ஸ் கேட்பாங்க, உங்களுக்கும் புது புதுசா ரெசிப்பி ட்ரைப் பண்ண நேரம் வந்துடுச்சு.
அதேநேரம் நம்ம செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸ் நம்ம குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு பிடித்த வகையிலும் இருக்க வேண்டும், அப்படி குழந்தைகளுக்கு பிடிச்ச மாறி மிச்சம் வைக்காத வகையில் இன்னிக்கு ஒரு காளான் வச்சி போண்டா எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான்- 3 கப்
மைதா மாவு- 1/4 கப்
சோள மாவு- 1/4 கப்
மிளகாய்த் தூள்- 1 டீஸ்பூன்
கரமசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
வெங்காயம்- 1
உப்பு- தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய்செய்முறை :
காளான் மற்றும் வெங்காயத்தை சின்ன சின்னதாக பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காளான், வெங்காயம் சேர்த்து அத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள மாசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும், எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெய்யில் போடவும்.
வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு மொறுமொறு என்று போண்டா வந்ததும் எடுக்கவும்.
அவ்ளோதான் சுட சுடவென காளான் போண்டா ரெடி, இத்துடன் தக்காளி சாஸ் மற்றும் மையோனிஸ் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவாங்க…
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.