குழந்தைகள் விரும்பும் காய்கறி கூட்டு ரெசிப்பி…!!
காய்கறிகளை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நம் உணவில் காய்கறிகளை தினமும் சேர்த்துக் கொள்வது என்பது நம்மை பல நோய்களில் இருந்து காக்கும்.
காய்கறிகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கூட்டு செய்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள், இப்படி அவர்கள் காய்கறிகள் மற்றும் கீரைகளை எதாவது ஒரு வகையில் உட்கொண்டால் பல விதமான சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
-
உருளைக்கிழங்கு – 1
-
கேரட் – 2
-
பீன்ஸ் – 5
-
பச்சைப்பாட்டாணி – 1 கப்
-
பெரிய வெங்காயம் – 1
-
பழுத்த தக்காளி – 1
-
கடுகு – 1/2 டீஸ்பூன்
-
எண்ணெய் – தேவையான அளவு
-
புதினா – சிறிதளவு
-
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
-
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
-
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
-
வரமிளகாய் – 3
-
கிராம்பு – 2
-
ஏலக்காய் – 1
செய்முறை :
கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை பொடியாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நறுக்கிய காய்கறிகளை மொத்தம் போட்டு, காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பின் நறுக்கிய காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு போட்டு வேகவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துறுவல், பொட்டுக்கடலை, வரமிளகாய், கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பிறகு தக்காளி மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
பின் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கி இறக்கினால் காய்கறி கூட்டு ரெடி.
-
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.