மருத்துவமனையில் சாருஹாசன் அனுமதி..! வேதனையில் சுஹாசினி..!
கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன், திரைப்பட நடிகரும் ஓய்வு பெற்ற வழக்கறிஞருமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு வெளிவந்த தபெரனா கதெ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட ஆகிய விருதுகளை வென்றுள்ளார். தற்போது 93 வயதாகும் இவர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளிவந்த ஹரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சாருஹாசனுக்கு மூன்று மகள்கள், அதில் ஒருவர் தான் சுஹாசினி. தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த சுஹாசினி பின்னர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்துகொண்டார்.
மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த உதிரிப் பூக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகராக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம் என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சாருஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நடிகை சுஹாசினி தனது தந்தையை கட்டியணைத்தவாரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, என்னுடைய தந்தைக்கு மருத்துவ வெக்கேஷன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகள்களின் கவனிப்புடன் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றன. அதே போல் இதைப்பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், கமெண்ட் செய்துள்ளார். அதில் அவரை பத்திரமாக பார்த்துக்கோ சுஹாசினி, மிகவும் அரிய மனிதர் என பதிவிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்