வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! அடையாளம் தெரியாத உடல்கள் நல்லடக்கம்..!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 380ஆக அதிகரித்துள்ளது..
அதேபோல் சூரல்மலை மற்றும் முண்டகை ஆகிய பகுதியில் இருந்து 35 கிமீக்கும் மேற் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் பல உடல்கள் மீட்க்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரளா மற்றும் இராணுவ மோப்பநாய் பிரிவு, சிறப்பு மீட்புப் படையினர், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு, கேரளா போலீஸ், தீயணைப்புத்துறையினர், வனத்துறை அதிகாரிகள், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர், மருத்துவக் குழுவினர், இந்திய கடற்படை வீரர்கள், கடலோரக் காவல் படை அதிகாரிகள் என 12 குழுக்களைச் சேர்ந்த 1264 பேர் 6 பிரிவுகளாக பிரிந்து தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் அடையாளம் தெரியாத 64 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இதில் பலியானவர்களில் விவரம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை அதே சமயம் இறந்தவர்களின் உடலை வாங்க யாரும் முன் வராததால் சர்வ மத பிரார்த்தனையுடன் அவர்களது உடல் நல்லடக்கம் செய்ய கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக புத்துமலையின் அருகிலுள்ள பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு 8 உடல்கள் சர்வ மத பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..
பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவும் வகையில் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரளாவிற்கு நிவாரண நிதியாக வழங்கப்போவதாக காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்திருந்தது. மேலும் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அந்த கூட்டணி அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பேரிடர் திட்டத்திற்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப ரீதியிலான தேசிய பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..