குழந்தை புற்றுநோய் வராமல் தடுக்க வழி..!!
குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை பீடியாட்ரிக் கேன்சர் என்று அழைப்பார்கள். இது 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். குழந்தை புற்று நோய் வருவதற்கு சில மரபணு நிலைமைகள், சில ரசாயனப் பொருட்கள், கதிர்வீச்சுகள் இதன் காரணங்களால் ஏற்படுகிறது.
குழந்தை புற்று நோயின் அறிகுறிகள் சோர்வு, காய்ச்சல், எடைகுறைவு, ரத்தப்போக்கு மற்றும் தலைவலி, வயிறு வீக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதன் அபாயத்தை குறைக்க ..,
* புகைப் பழக்கம் உள்ளவர்கள் அருகே இருக்க கூடாது.
* அதிக காற்று மாசுபாடு உள்ள இடத்தில் அழைத்து செல்லக் கூடாது.
* சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்.
* ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதவகை சத்துப் பொருட்களை தினமும் கொடுத்து பழக வேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பூசி களை அந்த அந்த வயதில் போட வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் குழந்தை புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி