முகத்தில் அதிகமாக வியர்க்க காரணம் என்ன..?
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிகபடியான வியர்வை வரக் காரணம். உடல் அதிகமாக சூடாகும் போது இந்த சுரப்பி வருகிறது.
முகத்தில் அதிகமாக வியர்வை உண்டாகுபவர்களுக்கு தலையிலும் அதிகமாக வியர்வை வரும். சிலருக்கு மரபணு மூலமாகவும் அதிகமாக முகத்தில் வியர்க்கும்.
அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் முகத்தில் வியர்க்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் முகத்தில் வியர்க்கும். உடற்பயிற்சி அதிகமாக செய்வதாலும் முகத்தில் வியர்க்கும். கடினமான உடற்பயிற்சிகளை செய்ய கூடாது.
உடல் குளிர்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூடாக இருந்தால் உடலானது தன்னை வியர்க்க வைக்கும். இதனால் குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.
முகத்தில் வியர்வையை கட்டுப்படுத்த அடிக்கடி முகத்தை கழுவலாம் அல்லது குளித்து விடலாம்.
அதிகமாக தண்ணீர் பருக வேண்டும் மேலும் தண்ணீர் நிறைந்த பழம் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும், இதனால் அதிகபடியான வியர்வையை தடுக்கலாம்.
முகத்தில் எண்ணெய் சுரப்பி அதிகமாக இருந்தாலும் வியர்க்கும் இதனால் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.