எந்த உடை அணிந்தாலும் ஒல்லியாக தெரிய வேண்டுமா..? இதை படிங்க
உடல் பருமனாக உள்ள பெண்களுக்கு சில உடைகள் அணியும் பொழுது, இன்னும் பருமன் அதிகமாக காட்டும். ஆனால் ஒரு சில உடைகளை அணியும் பொழுது அவை உடல் மெலிதாக காட்டும். அது எந்த மாதிரியான உடைகள் என்பதை பற்றி பார்க்கலாம்.
சில உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு ஜீன்ஸ், குர்தாஸ் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும் உடல் பருமன் காரணத்தால் அணிய முடியாமல் போய் விடும், இவை அனைத்திற்கான தீர்வும் இங்கே பார்க்கலாம்.
உடல் அமைப்பு : உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று, தோல் பட்டை மற்றும் கால் தொடை பகுதியில் சதை அதிகமாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதை கவனித்து அதற்கேற்றாற் போல் ஆடையை தேர்வு செய்ய வேண்டும்.
நீளமான குர்தா : பருமன் அதிகம் உள்ள பெண்கள் நீளமான குர்தா அணிந்தால், இன்னும் குண்டாக தெரிவோம் என்று நினைத்து கொண்டு இருப்பார்கள், ஆனால் அது தவறு.
உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள் பலாசோவுடன் நீள குர்தா அணிந்தால் உடல் எடை மெலிதாக காட்டும். இன்னும் அழகாக காட்ட அதனுடன் பெல்ட் அணியலாம், ஸ்லீவ் லெஸ் புல் டாப் அணியலாம்.
கலர் தேர்வு : எந்த உடல் பருமன் உடையவராக இருந்தாலும், சரியான கலர் தேர்வு செய்து அணிய வேண்டும். பேன்ட் டார்க் கலர் என்றால், டாப் லைட் கலராக இருக்க வேண்டும்.
உடையின் டிசைன்கள் : டாப்ஸ் தேர்வு செய்யும் பொழுது, சிறிய பூ போட்ட டாப்ஸ், பிளைன் டாப்ஸ் அணியலாம். பெரிய கோடு போட்ட, வட்டமிட்ட டாப்ஸ்கள், அணியும் பொழுது இன்னும் உடல் பருமன் அதிகமாக காட்டும்.
அனார்கலி : பொதுவாகவே நிறைய பெண்களை கவர்ந்த ஒரு உடை என்றால் அது அனார்கலி தான், இதை அணியும் பொழுது, அழகாக மட்டுமல்ல, மிகவும் உயர்வாகவும் காட்டும்.
பருமன் அதிகம் உள்ள பெண்கள் காட்டன் அனார்கலி தேர்வு செய்யாமல், நெட் மெட்டீரியலில் தேர்வு செய்யலாம்.
பெப்லம் டாப் : பெப்லம்ஸ் டாப்ஸ் அணிய விரும்பும் பெண்கள், பிலீட்ஸ் வைத்த டாப்ஸ் அணியாமல், இருப்பது நல்லது,
அது இன்னும் வயிற்று பகுதியை இறுக்கி விடும். பிலீட்ஸ் இல்லாத டாப்ஸ் களை அணியலாம்.
லேகங்கா : லேகங்கா என்றால் அதை விரும்பாத பெண்களே இருக்க முடியாது, அனைவரையும் வெகு விரைவில் கவர்ந்த ஒரு உடை தான் லேகங்கா.
குண்டாக இருக்கும் பெண்கள் மேல் டாப்பை சற்று நீளமாக அணிந்தால், உடல் பருமன் அதிகமாக இருப்பது தெரியாது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்துப் படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி