7 நாட்களில் அழகான மெல்லிடை உடல் வேண்டுமா..? இந்த ரகசியம் கேளுங்க
இயல்பாகவே சில பெண்கள் உடல் பருமனுடன் இருப்பார்கள், ஒரு சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் உடல் எடை அதிகரித்து விடும்.. அந்த உடல் எடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவது சாத்தியமா என்று கேட்டால்..? சாத்தியம் தான்.
டே எப்புட்றா..? என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சில டிப்ஸ் களை நீங்கள் பாளோ செய்தாலே போதும்.
உங்களின் உடல் எடை குறைப்பு முயற்சியை தொடங்குவதற்கு முன், உங்களின் உடல் எடை எவ்வளவு இருக்கிறது. என பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் நாள் : ஆப்பிள், சீதா, வாழைப்பழம் தவிர வேறு எந்த பழத்தை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, கொய்யாக்காய், சப்போட்டா, போன்ற பழங்கள்.
இரண்டாம் நாள் : காரட், போன்ற காய்கறிகளை பச்சையாகவும், உருளைக்கிழங்கு போன்ற மற்ற காய்கறிகளை வேக வைத்தும் சாப்பிட வேண்டும். எண்ணெய் ஊற்றக்கூடாது. தேங்காய் சேர்க்க கூடாது. இதனால் கார்போ ஹைட்ரேட் கிடைக்கும்.
மூன்றாம் நாள் : பழங்கள் மற்றும் காய்கறிகள், முளைக்கட்டிய பயிர்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
நான்காம் நாள் : வாழைப்பழம், பால், வெஜிடேபிள் சூப், சாப்பிட வேண்டும். இதனால் சோடியம் பொட்டாசியம் கிடைக்கும்.
ஐந்தாம் நாள் : ஒரு கப் சாதம், 6 தக்காளி , 12 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அதிகரிக்கும்.
ஆறாம் நாள் : ஒரு கப் சாதம், வேக வைத்த காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பொட்டாசியம், புரதச்சத்துக்கள் அதிகரிக்கும்.
ஏழாம் நாள் : ஒரு கப் சாதம், வேக வைத்த காய்கறிகள், இயற்கை பழங்களின் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் மறுநாள் உடல் எடையை செக் செய்து பாருங்கள், உடல் எடை குறைந்து இருக்கும் என பிட்னெஸ் மருத்துவர் ஸ்ரீமதி வெங்கட்ராமன் கூறினார்.
மேலும் இது போன்ற பல குறிப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி