100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி நாளை விளையாடுகிறார்.
ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியையும், விராட் கோலியின் பேட்டிங்கையும் காண ஆர்வமாக உள்ளார்கள்.
சர்வதேச அளவில் இரண்டரை ஆண்டுகளாக கோலி சதமடிக்கவில்லை. அடுத்தச் சத்தம் எப்போது என்று நீண்ட நாளாகக் காத்திருந்த ரசிகர்களின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் கோலியின் பங்கேற்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்நிலையில் கோலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸூக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் சார்ந்த அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த தயாரிப்புடன் தான் செல்வேன்,காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இந்த நாள் என்ன தரப்போகிறது என்று தெரியவில்லை, ஆனால் எதைச் செய்தலும் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடனும் தான் செய்யவேண்டும் என எண்ணிக்கொள்வேன். எனக்கு கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். ஆடுகளத்தில் என் முழு ஆற்றலையும் வெளிப்படுத்திக்கொண்ட இருப்பேன்.
மேலும் சிறிதுகாலம் நான் மன அழுத்தத்தில் இருந்ததை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை. மனத்தளவில் பலமானவனாக நான் பார்க்கப்படுகிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை நாம் அறிய வேண்டும் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி விடும். இந்தக் காலக்கட்டம் தான் நான் உணர மறுத்த பல பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தது என்று அவர் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/Chv5Ks9A71q/