விழுப்புரம் மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா..!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை தேரோட்டத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணியளவில் ஊர் எல்லையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது.
பூங்கரகத்துடன் பக்கத்தர்கள் சாகை தலையில் சுமந்து வந்து.., கூல் ஊற்றி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்று இரவு வீதிஉலா வந்துள்ளார்.
வீதி உலாவில்.., கிராம மக்கள் அனைவரும் அம்மனுக்கு தீப ஆராதனை செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 2ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற இருப்பதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post