காஞ்சி வைகுண்ட பெருமாளுக்கு பிரம்மோற்சவம்..!
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் கடந்த மே 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் தொடங்கிய மூன்றாம் நாள் கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகான உற்சவமும் நடைபெற்றது.
மே 22ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் ராஜ வீதியில் பவனி வந்து பக்கதர்களுக்கு அருள் பாலித்தார்.
மே 24ம் தேதி பல்லக்கில் தீர்த்த வாரியும், இரவில் முகுந்த விமான உற்சவமும், அன்று சாந்தி திருமஞ்சனமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post