ரூபாய் நோட்டுகளால் காட்சி அளிக்கும் வேம்பு மாரியம்மன்..!!
ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் திருவிழா நடத்துவது வழக்கம்.., அதிலும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் மிக விஷேசமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.. ஆடி வெள்ளி., ஆடி அமாவாசை., ஆடி கிருத்திகை., ஆடிப்பெருக்கு மற்றும் வரலட்சுமி நோம்பு.. என இந்த நாட்கள் மிக விசேஷமான நாளாக கொண்டாடப்படுகிறது..
அந்த வகையில் நேற்று வரலட்சுமி நோம்பானது பல்வேறு கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது.
அதன் தொடர்ச்சியாக வேம்பு மாரியம்மனுக்கு 500, 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலையம் முழுவதும் வளையல் தோரங்களால் அலங்கரிக்கப்பட்டு, வேம்பு மாரியம்மனுக்கு தீபாராதனை கட்டப்பட்டது.
அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வேம்பு மாரியம்மன தனலட்சுமி பணம் அலங்காரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..