சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை..!! இதுல உங்க ஏரியா இருக்கா..?
சென்னையில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், புழல், கந்தன்சாவடி, பெசன்ட் நகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது..
சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில்., தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மின்கம்பங்கள் தாக்கப்படாமல் இருக்க தற்போது முன் தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.. குறிப்பாக பலரும் இந்த வெயிலில் அதிக மின்சாரம் உபயோகிக்கப்பதால் ஆங்காங்ககே மின்சாரம் கம்பங்கள் தீ பற்றிக்கொள்வதால்.,
மின்சார வாரியம் முடிந்தவரை மின்சாரம் ரத்தாகாத அளவிற்கு பணியினை செய்து வருகிறது.
அதேநேரம் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளைத்தான் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், பெசன்ட் நகர் உள்பட முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சென்னை-யில் 17.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், புழல், கந்தன்சாவடி, பெசன்ட் நகர், எழில் நகர், அம்பத்தூர் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது”. அதேபோல் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தாளும் மின்விநியோகம் மீண்டும் தொடங்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..