வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் பிரச்சனைகள்..
நாம் இருக்கும் வீடு வாஸ்து படி அமைக்கப்பட்டுள்ளதா..? வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்து படி தான் இருக்கிறதா..? என உங்களுக்கு தெரியுமா..?
வாஸ்து சாஸ்திரம் :
வாஸ்து சாஸ்திரம் என்பது காலம் காலமாக இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வரும் ஒரு பாரம்பரியம் ஆகும்.
ஒரு வீடு கட்டப்படும் பொழுதே எப்படி கட்ட வேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கிறது.
16 திசைகள், பஞ்ச பூதங்கள் அடிப்படையாக கொண்டதே வாஸ்து சாஸ்திரம் என்பார்கள்.
வீட்டின் அறைகளின் அளவு அவற்றில் பூசப்படும் நிறங்களின் அளவு இவற்றை மனையடி சாஸ்திரம் என்று சொல்லுவார்கள்.
வாஸ்துவில் எதிர்மறான விஷயங்கள் ஏற்பட்டால் அவற்றை வாஸ்து தோஷம் என்று சொல்லுவார்கள்.
வீடு வாஸ்து தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை சில வழி முறைகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
* வீட்டில் தூக்கம் இல்லாமல் அவதி பட்டாலோ அல்லது இரவு நேரத்தில் தூக்கம் பாதிக்கப்பட்டலோ அந்த இடம் வாஸ்து தோஷத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. படுக்கை அறை திசையை மாற்றி அமைக்க வேண்டும்.
* குடும்ப உறுப்பினர்களிடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டால், வீட்டின் அஸ்திவாரம் சரியாக அமைக்கப்படவில்லை. அஸ்திவாரம் தவறாக உள்ளது.
Discussion about this post