மகளிர் உரிமை தொகைக்கான சிறப்பு முகாம் தொடக்கம்..!
தமிழ்நாடு மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான முழு பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
மகளிர் உரிமைதொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் இன்று முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார், மேலும் ரேஷன் கடை பணியாளர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 36000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9:30 மணியளவில் துவங்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வந்து விடும். அதற்கான முகாம்கள் இன்று தொடங்கி விட்டோம்.., விண்ணப்பம் பதிவு செய்வதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ள கூடாது என்பதற்காக கூடுதல் போலீஸ் போடப்பட்டுள்ளது.
மூன்று கட்டமாக இந்த முகாம் நடைபெறும் என்பதால்.., மக்கள் அச்சம் அடைய வேண்டாம். மகளிர் உரிமைதொகை திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடைவார்கள் என இவ்வாறே முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.