பிரச்சனைகள் தீர்க்கும் வாராஹி அம்மன் மந்திரம்..! கிடைக்கும் பலன்..!
சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால் கால சூழ்நிலைகள் கிரக நிலைகள் இவை அனைத்தும் மனிதனுக்கு சாதகமாக இல்லை என்றால் பல பிரச்சனைகள் தேடி வரும்.
அப்படி இருக்கும் நேரத்தில் மனிதன் வாழ்க்கையே நிலையற்றது அதில் வரும் துன்பங்கள் எல்லாம் நம்மை பக்குவ படுத்தவும் நம்மை பல படுத்தவும் தான் என்று புரிந்தால் போதும் மனம் சஞ்சலம் அடைவதை நிறுத்தி கொள்ளும்.
ராஜாக்கள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் போருக்கு செல்லும் முன் வாராஹி அம்மனை வழிபட்டு தான் சென்று இருக்கிறார்கள்.
அதே போல் தான் வாழ்க்கையில் எத்தனை பெரிய பிரச்சனை போராக இருந்தாலும் அந்த போரில் இருந்து நம்மை காப்பாற்ற கூடிய அம்மன் வாராஹியை வழிபாடு செய்ய அந்த பிரச்சனை வந்த வழி தெரியமால் போயிவிடும்.
இப்பொழுது நாம் வாராஹி அம்மனை எப்படி வாழிபாடு செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது நாம் வீட்டில் வாராஹி அம்மனின் படம் இல்லை என்றாலும் இருக்கும் அம்மன் படத்தை வாராஹி அம்மனாக பாவித்து பூஜை செய்து வாழிபாடு செய்யவேண்டும்.
பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பன்னீர் புஷ்பங்களை வாங்கி வைத்து அந்த பன்னீர் புஷ்பங்களை அம்பாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.
பிறகு வாராஹி அம்மனுக்கு உரிய மந்திரம் சொல்ல வேண்டும்.அதாவது
“ஓம் பாப நாசின்யை நமஹ..!
ஓம் துக்க நாசின்யை நமஹ..!
ஓம்ம் ரிபு நாசின்யை நமஹ..!
ஓம் தோஷ நாசினியை நமஹ!
ஓம் வியாதி நாசினியை நமஹ..”
இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே வாசனை நிறைந்த பன்னீர் புஷ்பங்களால் வராகி தாய்க்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஒருவருக்கு வாராகியின் பெயரை சொன்ன உடனே மனதில் உறுதி வந்துவிடும். எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் கலங்காமல் இந்த வழிபாட்டை செய்யவேண்டும்.
நாள் கிழமை நேரம் நட்சத்திரம் எதுவுமே தேவையில்லை.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..