திருச்சி அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக துவங்கியது.
பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் என்றழைக்கப்படும் முதல் விழாவுடன் தொடங்கியது.
வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22ஆம் தேதியும் – வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதி சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.