சாராய கடத்தலில் சிக்கிய வாகனத்தால் 23 லட்சம் அரசுக்கு ஆதாயம்!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபானம் கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் பொது ஏலம் விடப்பட்டது.
அதில், 84 இருசக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 ஏலதாரர்கள் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர்.
அரசுக்கு ஆதாயம் சேர்க்கும் வகையில் ஏலத்தில் கிடைத்த 23 லட்சம் தொகையை கருவூலத்தில் வரவு வைக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.