திமுக கூட்டணியில் எந்த சலசலப்பு இல்லை. மதிமுக திமுக கூட்டணியில் தான் இருக்கிறது – அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டி
சென்னை அண்ணா அறிவவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன் மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்தார்.
சந்திப்புக்கு பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி:
மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்யும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் போது ஓபிசி பிரிவினரையும் கணக்கிட வேண்டும் என்பது குறித்து முதல்வரின் சந்திப்பின் போது ஆலோசித்தோம்.
திமுக கூட்டணியில் எந்த சலசலப்பு இல்லை மதிமுக திமுக கூட்டணியில் தான் இருக்கிறது.
ஆளுநருக்கு எதிராக மதிமுக நடத்திய கையெழுத்து இயக்கம் உள்துறைக்கு அனுப்பி விட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது. இந்த முயற்சியில் வெற்றி கிடைக்கிறதா என்பதை விட, ஆளுநருக்கு எதிராக இவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே இந்த முயற்சி. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற விவகாரத்தில் கோடிக்கணக்கான நபர்கள் கையெழுத்திட தயாராக இருக்கிறார்கள்
தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தமிழகத்திற்கு 8 எம்.பிக்கள் தமிழகத்திற்கு குறையலாம்.இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும்.
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் சொல்லிவிட்டது ஒழுங்காற்றுக் குழுவும் சொல்லிவிட்டது. வேறு வழி இல்லாததால் கர்நாடகாவில் சாலையில் வந்து போராடுகிறார்கள். இந்தியா கூட்டணியில் அனைத்து கட்சிகளும் தொடர்கிறார்கள்
அதிமுக சார்பில் கூட்டணிக்கு தூது விடப்படுகிறதா என்ற கேள்விக்கு தூது எதுவும் விடவில்லை இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை சலசலப்பு இல்லை என தெரிவித்தார்.