திருமாவளவன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தது அரசியல் மாற்றத்திற்கு வழிவிடும் என்று நம்பவில்லை என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் எழுதிய கலைஞர் ஞாபகங்கள் பாடல் வெளியீடு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பாடலை வெளியிட்டனர்.
பின்னர் செய்கிறார்களை சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன்
ஒரு நாட்டில் தோன்றும் நதி அந்த நாட்டிற்கு சொந்தமானது அல்ல என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய எதார்த்தம். இது காவிரி விவகாரத்திலும் பொருந்தும் காவிரி நதி கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தம் அல்ல நதி செல்லக்கூடிய அனைத்து மாநிலத்திற்கும் சொந்தமானது.
கர்நாடகாவில் சில பேர் திட்டமிட்டு, தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகிறார்கள்.
உள்ளூர் அரசியல் காரணமாக கர்நடகாவில் போராடுகிறார்கள்.கர்நாடக பாஜக தண்ணீர் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். தமிழக பாஜக தண்ணீர் பெறுவதில் தமிழக அரசு தவறிவிட்டது என்கிறார்கள் எனவே காவிரியை வைத்து பாஜக அரசியல் செய்கிறார்கள் என்றார்.
தொடந்து பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் இரண்டு தினங்களுக்கு முன்பு திருமாவளவன் இடம் பேசும்போது கூட திமுக கூட்டணியில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது அரசியல் கட்சித் தலைவர்கள் நலம் விசாரிக்கிறார்கள்.
திருமாவளவன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தது அரசியல் மாற்றத்திற்கு வழிவிடும் என்று நம்பவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் மனிதாபிமானம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் உறுதியுடன் இருக்கிறார்கள். எனவே கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான காலமும் தேவையையும் இப்போது இல்லை அதற்கான நேரம் வரும்போது பேசுவோம் என்றார்.