அதிசயங்கள் நிகழ்த்தும் பாதாள முருகன்..! ஒரு முறை இத்திருத்தலம் சென்றால் போதும்..!!
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் இருந்தால் அவர்களுக்கு தேவையானது அவர்களை தேடி வந்து சேரும் என சொல்லுவார்கள்.
உதாரணதிற்கு வேலை, பதவி உயர்வு, சந்தோசம், பொறுப்பு, சொத்து, திருமண வாழ்க்கை, என பல உண்டு ..
ஒரு சிலருக்கு அந்த அதிஷ்டம் கிடையாது என சொல்லலாம்..,
அப்படி அந்த வகையில் செவ்வாய் பலத்தை அதிகரிக்க பாதாள செம்பு முருகன் ஆலயம் சென்றால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என சொல்லலாம்.
கோவில் அமைந்துள்ள இடம் :
திண்டுக்கல் அருகே உள்ள இந்த ஆலயத்தில் ஸ்ரீ பைரவர் கிழக்கு பார்த்தபடி அமர்ந்துள்ளார். இவரை வழிபாட்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பது ஆன்மீக உண்மை.
மேலும் இந்த ஆலயத்தில் கருங்காலி மாலைகள் வழங்கப்படுகிறது..
இதனால் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். மேலும் இங்கு 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இப்படி பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் வேறு என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றன..? என்பது பற்றி பார்க்கலாம்.
இக் கோவிலின் கருவறை பூமியிலிருந்து 16 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு முருகன் வீற்றிருப்பதால் இவரை “பாதாள செம்பு முருகன்” என அழைக்கிறார்கள்.
கோயில் உள்ளே 18 அடிகள் இறங்கி சென்று தான் பார்க்க வேண்டும்.
ஆலயத்தின் முன்புறமாக கிழக்கு பார்த்தப்படி சங்கிலி கருப்புசாமி காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார்.
மேலும் இங்கு கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
அதே வேளை கருங்காலி வேல், சந்தன வேல் உள்ளிட்டவைகளை பக்தர்கள் முருகனுக்கு அணிவித்து பூஜை செய்வார்கள்.
இங்கிருந்து எடுத்து செல்லும் கருங்காலி மாலை அணிவதால் நாம் இழந்த சந்தோசம், சொத்து, பெயர், புகழ் என்பவை தானாக தேடி வரும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..