“மோடியின் ஊழல்” எதிர்த்து அடித்த உதயநிதி..! ஆதரங்களை வெளியிட்ட ராகுல்காந்தி..!!
தேனீ மாவட்டம் வீரபாண்டியில் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.., இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.., அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது.., ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடு தான் ஒரு முக்கிய காரணம்.., அவர்களின் அந்த வாழ்க்கை வரலாற்றை புளிசாதமும் சாம்பார் சாதமும் சொல்லும்..
சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி நடக்கப்போகும் அந்த மாநாடு பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும்.., ஒரு கட்சியின் வரலாறு கொள்கை பற்றி பேசுவோம்..
என் தாத்தா கருணாநிதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை நீட் உள்ளே வரவில்லை.., ஆனால் பஜாகவின் அடிமை ஆட்சியர்களான எடப்பாடி காலத்தில் தான் நீட் உள்ளே நுழைந்தது.. இந்த நீட் தேர்வால் அனிதா, ஜெகதீஷ் உட்பட 22 மாணவர்கள் தற்கொலை என்ற பெயரில் கொலை செய்யபடுள்ளார்கள்..
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என வாக்குறுதி கொடுத்தோம்.., அந்த நீட்டை ஒழிக்க போராடி கொண்டு தான் இருக்கிறோம்.., அதற்கான இரண்டு மசோதாக்கள் அனுப்பப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நீட்விலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி 50 நாளில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.. அதை சேலம் மாநாட்டில் வைத்து மக்கள் முன் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படும்..
நாங்கள் செய்து வரும் இந்த கையெழுத்து இயக்கம் வெறும் நாடகம் என எடப்பாடி சொல்லுகிறார்.., அவருக்கு நான் சொல்லுவது ஒன்று மட்டுமே நீங்களும் எங்களுடன் சேர்ந்து போராடுங்கள்.., அப்படி நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு வெற்றி கிடைத்துவிட்டால். அந்த வெற்றியை நீங்களே எடுத்துக்கொள்ளலாம்..
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் போடுகிறோம் என சொன்னார்கள்.., கிட்டத்தட்ட அவர்கள் வாக்குறுதி கொடுத்து 9 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது ஆனால் திமுக சொன்னபடி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளது..
மோடி சொன்னார் நாங்கள் குடும்ப ஆட்சி நடத்துகிறோம் என.. ஆம் நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துகிறோம்.., தமிழ்நாடே எங்களின் குடும்பம் தான் இனி எதை கண்டும் திமுக அஞ்சப்போவதில்லை.., பாஜக என்ன செய்தாலும் அதை எதிர்த்து நிற்க திமுக தயாரிகிவிட்டது.
மோடி ஆட்சியே அதானியின் வளர்சிக்காகத்தான் இருக்கிறது போல அடிக்கடி வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு வரும் மோடி.., விமானி இல்லாமல் கூட சென்று விடுவார் போல ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார் போல் இருக்கிறது.
அதற்கான ஆதரங்களை ராகுல்காந்தி வெளியிட்டாரே அதற்கு ஏன் மோடி பதில் சொல்லாமல் இருக்கிறார்.. ஆட்சிக்கு வரும் போது வருங்கால வல்லரசு நாடக இந்தியா அமையும் என மோடி சொன்னார்..? அதற்கான நடவடிக்கைகளை ஒன்றை கூட அவர் எடுக்கவில்லை.
ரமணா படத்தில் இறந்த ஒருவரை ஐசியூவில் வைத்து பணம் சம்பாதிப்பது போல இறந்த என்பத்து எட்டாயிரம் பேருக்கு மருத்துவகாப்பீடு என்ற பெயரில் ஊழல் செய்துள்ளனர்..
எடப்பாடி பழனிசாமி பாஜகவில் இருந்து பிரிந்து சென்றது எல்லாம் நாடகம் தான் என்பது பலரும் அறிந்த உண்மை.., அவர்கள் தனியாக நின்றாலும் சரி., கூட்டணி வைத்துக்கொண்டாலும் சரி வெற்றி அடையப்போவது என்னவோ திமுக தான் என இவாரே மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..