இந்திய நுகர்வோர் துறை இந்தியாவில் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணைத்து ஸ்மார்ட் போன்களிலும் டைப்-சி சார்ஜிங் போர்டை தயாரிக்க உற்பத்தி நிறுவங்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை USB சார்ஜிங் கேபிள் இரண்டு வகையில் இருந்து வருகிறது ஒன்று USB டைப் 2 மற்றும் மற்றொன்று USB-C என்று நுகர்வோர்களுக்கு விற்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா நுகர்வோர் விவாகரங்கள் துரையின் அதிகாரி அணைத்து ஸ்மார்ட் போன் மற்றும் சார்ஜிங் கேபிள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 2025 ஆண்டிற்கு பிறகு அணைத்து வகை போன்களுக்கும் டைப் சி கேபிள் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பில், இந்திய நுகர்வோர் விவகாரம் துறையின் செயலர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், இந்தியாவில் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தயாரிக்கும் அணைத்து வகை போன்களுக்கும் டைப்-சி சார்ஜிங் முறையை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 28, 2024 வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இதனை தொடர்ந்து அதற்கு மூன்று மாதங்கள் பிறகு இந்தியாவில் மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.