சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. முப்பது திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அண்ணா அறிவாலயத்தில் இளைஞர் அணி,மகளிர் அணி மற்றும் மாணவர் உள்ளிட்ட 23 அணிகள் மற்றும் 11 குழுக்களை கொண்ட கூட்டம் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய வருகிற நடாளுமன்ற தேர்தலுக்கான குழுக்களை ஏற்படுத்துவது, தொடர் கூட்டங்கள் நடத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சமூக ஊடகங்கள், தேநீர்க்கடை, திண்ணை பரப்புரைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார் அவர் பேசுகையில், கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பாகள் குறித்து பெருமை கொள்ளாமல் களத்தில் இறங்கி பணியை துவங்குங்கள் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று பேசினார். மேலும்,நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றும் பேசினார்.