கேரள மாநிலத்தில் விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொன்ற மத்திய தொழில் நிறுவன பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.‘
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தூரவூர் பகுதியை சேர்ந்தவர் ஜிஜோ ( வயது 25). விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி இரவு நெடும்பாச்சேரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புப்படை வீரர்கள் வந்த காருடன் இவரது கார் லேசாக உரசியுள்ளது.
இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் திடீரென்று தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் வந்த காரை ஓட்டியுள்ளனர். காரின் முன் நின்று பேசிக் கொண்டிருந்த லிஜோ பானட்டில் விழுந்துள்ளார். தொடர்ந்து, காரை வேகமாக ஓட்டி சென்று திடீரென்று சடன் பிரேக் அடித்துள்ளனர்.
அப்போது, கீழே விழுந்த லிஜோ மீது கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் காரை ஏற்றிக் கொன்றுள்ளனர். இது தொடர்பாக , நெடும்பாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில் இருந்த தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த எஸ்.ஐ மற்றும் கான்ஸடபிள் ஒருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.