சரும தழும்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!!
ஆண், பெண் இருவருக்கும் சரும பராமரிப்பில் மிகவும் சவாலாக இருப்பது தழும்புகள். இதை னீக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் சிலருக்கு பலன் தராது.
குறிப்பாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு எற்படும் தழும்புகளும், வளரும் போது தசைகள் விரிவு காரணமாக ஏற்படும் தழும்புகள் ஏற்படுகிறது.
குழந்தைபெற்ற பெண்கள் மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பு காரணமாக சிறுவயதில் தொடை, கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் இந்த தழும்புகள் உருவாகிறது. இதை தவிர எடையை குறைப்பதற்காக ஜிம்மில் பயிற்சி செய்யும் போதும் இந்த தழும்புகள் உருவாகிறது.
இதை தடுப்பதற்கான மற்றும் எளிதில் மறைவதற்கான இயற்கை முறைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
பாதாம் எண்ணெய் :
சர்க்கரையுடன் சமமான அளவு பாதாம் எண்ணெய் எடுத்து ஒன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் தழும்புகள் மறையும். இதனை வாரத்திற்கு இரண்டு , மூன்று முறை செய்யலாம்
கற்றாழை :
சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கற்றாழை ஜெல்லை, குளித்ததன் பின் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மறையும்.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இந்த தேங்காய் எண்ணெயை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து பின்னர் கழுவினால் தழும்புகள் மறையும்.
விளக்கெண்ணெய் :
பிரசவ தழும்புகளை விளக்கெண்ணெய் கொண்டு நீக்கலாம் கொண்டது. இந்தவிளக்கெண்ணெயை தழும்புகள் உள்ள இடங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறையும்.
– சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..