சிக்கிய பாஜக பிரமுகர்..!! 4 கோடி ரூபாய் பணம்..? வெளிவந்த அந்த பகீர் தகவல்..!!
சென்னையில் இருந்து நெல்லை செல்லும் இரயிலில் 4 கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கடந்த ஏப்ரல் 7ம் தேதி இரவு இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏப்ரல் 7ம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட நெல்லை இரயில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தாம்பரம் இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடைத்துள்ளது. அவர்களிடம் விசாரணை செய்ததில் 3 பேரும் மாறி மாறி பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூன்று பேரும் பாஜக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
சட்ட விரோதமாக இரயிலில் கடத்தி கொண்டு சென்ற இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர்கள் யார்..? என்பது பற்றியும், பணம் எங்கே இருந்து எடுத்து வரப்பட்டது..? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதே பல அதிர்ச்சி தகவல் வெளியானது.
நயினார் நாகேந்திரனின் ஓட்டல் :
கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையில் வெளிவந்தது. காரில் சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் இரயிலில் சென்றதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து 4 கோடி ரூபாய் பணத்தின் முழு பின்னணி குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த 2 இடங்களிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா..? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த பணம் எங்கே இருந்து கொண்டு வரப்பட்டது..? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டுள்ளது..? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தது. சென்னை கிரீன்வேஸ் ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பணத்தை வசூல் செய்து மொத்தமாக 4 கோடியாக சேர்த்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து இரயிலில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாம்பரம் இரயில் நிலையத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலின் மேலாளர் சதீஷிடம் இருந்து கைப்பற்றிய 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் தொழில் துறை பிரிவு தலைவர் கோவர்த்தனனுக்கு தாம்பரம் மாநகர காவல்துறை சம்மன் அனுப்பினர்..
அதன் பின் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள கோவர்த்தனனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து இந்த 4 கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டு நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் நெல்லை வேட்பாளருக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கைப்பற்றியதில் பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் சிக்கியுள்ளார்.., அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இன்னும் சிலரின் பெயர்கள் வெளிவந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் சமயத்தில் அடுத்தடுத்து பாஜகவை பற்றிய தகவல்கள் வெளிவருவதால் இந்த தேர்தலில் ஜெயிப்போமா என்ற பயம் பாஜக மத்தியில் எழுந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..