இரவில் பைக் டாக்சி புக்கிங் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!! இனி இவரை கண்டால் உஷார் பெண்களே..!!
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சரண்யா (பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது) 22 வயது இளம்பெண், நேற்று ராயப்பேட்டை வி.எம் தெருவில் உள்ள தனது சகோதரரை பார்க்க பைக் டாக்சி ஆப் மூலம் வாடகை இருசக்கர வாகனத்தில் புக்கிங் செய்துள்ளார்.
பின் சிறிது நேரம் கழித்து சூளைமேட்டிற்கு வந்த அந்த நபர் (ஓட்டுநர் ரமேஷ்), அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இளம் பெண்ணிடம் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
ராயப்பேட்டை வந்து இறங்கியதும் அந்த இளம் பெண்ணை கட்டிபிடிக்க முயற்சி செய்துள்ளார். அந்த பைக் ஓட்டுநர் உடனடியாக அந்த பெண் தனது சகோதரனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண்ணின் சகோதரர், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர் ரமேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். ராயப்பேட்டை போலீசார் ரமேஷ் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Discussion about this post