மயிலாப்பூரில் தொடரும் செல்போன் பறிப்பு..!! மக்களே உஷார்..!!
சென்னை மயிலாப்பூர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து கொண்டிருந்த செல்போன் பறிப்பு பட்ட பகலிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, இதனால் செல்போனை இழந்த பொது மக்கள் இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்குள், அடுத்த பதறவைக்கும் சம்பவமாக இன்று காலை மயிலாப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கி மர்ம கும்பல் 5 செல்போன்களை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து மயிலாப்பூர் காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார்.., சிசிடிவி ஆய்வு செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிண்டுகுமார் புய்யன் (31) என்பவரை கத்தியால் குத்தி 5 செல்போன்கள் பறித்து சென்றுள்ளனர். கண்ணகி நகரை சேந்த வெள்ளை சரத் (19), மயிலாப்பூரை சேர்ந்த விஜய் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post