முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான இறுதிக் கட்ட ஆலோசனை இன்று நடைபெறுகிறது.
அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் அரசிடம் உள்ள வருமானவரித்துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் ஏற்படும் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு ரேஷன் கடைகள் மூலம் பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி கட்ட ஆலோசனை மேற்கொள்கிறார். பயனாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் கேட்டறிகிறார்.