இன்று ஆடிப்பெருக்கு..! ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!
ஆடி மாதம் தொடங்கியதுமே திருவிழாக்கள் கலை கட்டிவிடும்.., அதிலும் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மிக முக்கியமான நாள்கள்.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி 18 அன்று சப்த கன்னியரை வழிபட்டால் நாம் நினைத்த செயல் எளிதில் நடைபெறும் என்பது ஐதீகம்.., ஆடிமாதத்தில் மழை பெய்து விவாசாய பயிர்களை செழிக்க செய்வதால் ஆடி பெருக்கு மிக முக்கியமான ஒன்று.., ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதால் இதை “ஆடிப்பெருக்கு” என்று அழைப்பார்கள்.
ஆடி 18 அன்று ஆறு ஏரி மற்றும் குளம் கிணறு போன்ற நீர் நிலைகளில் குளித்து விட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி ஒரு நெய்வைத்தியம் படைத்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.
* திருமணம் ஆன பெண்கள் தாலி கையிறு மற்றும் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.
* ஆண்கள் ஒரு கருப்பு கயிறு காலில் கட்டிக்கொண்டால் .., கண் திஷ்டிகள் கழிந்து விடும்.
* திருமணம் ஆகாத பெண்கள் கையில் மஞ்சள் கயிறை காப்பு போல கட்டிக் கொள்ளலாம்.
அதன் பெயரில் இன்று ஆடிப்பெருக்கு விழா காவேரி கரையோர பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில் குளக்கரைக்கு சென்று நீராடினர்.
ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் அதிகாலை 4மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூஜைகள் செய்துள்ளனர்.
திருமணமான பெண்கள், புதுமண பெண்கள் மற்றும் தம்பதியர்கள் மற்றும் கன்னிப்பெண்கள் என அனைவரும் முளைப்பாரி மங்கள பூஜை பொருட்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை எடுத்து வந்து காவிரி நதியில் நீராடி விட்டு, பின் படிக்கரையில் வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார் வைத்து அதில் பச்சரிசி, மஞ்சள் குங்குமம், வெல்லம், தேங்காய் பூ பழம் வைத்து தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.
திருமணம் ஆன பெண்கள் அவர்களின் தாலியை மாற்றிக்கொண்டனர். கன்னிப்பெண்கள் காவிரி தாய்க்கு பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றை காவிரிக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் கட்டி வழிபட்டனர்.
இன்று ஆடிப்பெருக்கு என்பதால் வழக்கத்தை விட அதிகமான பெண்கள் இன்று கோவிலில் குவிந்துள்ளனர். காலை ஆறு மணி முதல் தற்போது வரை 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post