ஆடிப்பெருக்கு சப்த கன்னியர்கள் வழிபாடு ..!!
ஆடி மாதம் தொடங்கியதுமே திருவிழாக்கள் கலை கட்டிவிடும்.., அதிலும் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மிக முக்கியமான நாள்கள்.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி 18 அன்று சப்த கன்னியரை வழிபட்டால் நாம் நினைத்த செயல் எளிதில் நடைபெறும் என்பது ஐதீகம்.., ஆடிமாதத்தில் மழை பெய்து விவாசாய பயிர்களை செழிக்க செய்வதால் ஆடி பெருக்கு மிக முக்கியமான ஒன்று.., ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதால் இதை “ஆடிப்பெருக்கு” என்று அழைப்பார்கள்.
ஆடி 18 அன்று ஆறு ஏரி மற்றும் குளம் கிணறு போன்ற நீர் நிலைகளில் குளித்து விட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி ஒரு நெய்வைத்தியம் படைத்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.
* திருமணம் ஆன பெண்கள் தாலி கையிறு மற்றும் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.
* ஆண்கள் ஒரு கருப்பு கயிறு காலில் கட்டிக்கொண்டால் .., கண் திஷ்டிகள் கழிந்து விடும்.
* திருமணம் ஆகாத பெண்கள் கையில் மஞ்சள் கயிறை காப்பு போல கட்டிக் கொள்ளலாம்.
சப்த கன்னி வழிபாடு :
ஆடி பிறந்து 18ம் நாள் கொண்டாடுவதை ஆடி 18 என்று அழைப்பார்கள். இந்த ஆடி 18 அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் சப்த கன்னியரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். ஆடி 18 அன்று நாக புற்று கோவிலுக்கு சென்று புற்றுக்கு முன் இருக்கும் சப்த கன்னியர்களுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகிவிடும்.