சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள்..!
செய்திகள், தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு என்பதற்காக இன்று பல சமூக வலைத்தளங்கள் உருவாகி வருகிறது.
இன்று பொழுதுபோக்கிற்காக வலைத்தளங்களுக்குள் வந்து அதற்கே அடிமையாக்கும் சமூக வலைத்தளங்களை பற்றி பார்போமா..
மக்களிடையே அன்றாட வாழ்வில் பயன்படும் Google, Twitter, Youtube, Instagram போன்றவைகள் நன்மைகளை அளித்தாலும் அதிக அளவில் தீமைகளும் இருக்கின்றன.
குறிப்பாக Whatsapp, Twitter, Snapchat, Facebook, Instagram, Youtube போன்ற வலைத்தளங்கள் ஆகியவை பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் ஆப் (Whatsapp):
Whatsapp செயலியை கண்டிப்பாக அனைத்து ஸ்மாட் போனிலும் காணலாம் காரணம் இதன் மூலம் புகைப்படம், வீடியோஸ், செய்திகள் மேலும் நாம் இருக்கும் இடத்தையும் (Location) மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
வாட்ஸ் ஆப்பிற்கு முன்பிருந்த செயலியான Bluetooth, Share It ஆகியவை மூலம் படங்கள், பாடல்கள், வீடியோஸ் ஆகியவை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் கூடுதலாக வாட்ஸ் ஆப் மூலம் நாம் இருக்கும் இடத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவ்விடத்தை நம் உறவினர்களுக்கு அனுப்பும் வசதி உண்டு.
இத்தகையை நல்ல வழியில் பயன்படக்கூடிய வாட்ஸ் ஆப் செயலியை சிலர் தவறான புகைப்படங்களை அனுப்பவும், தவறான செய்திகள் பரப்பவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
நன்மைகள்:
சமூக வலைத்தளமானது நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிரவும், ஈசியாக பணத்தை அனுப்பவும் பெரிதும் பயன்படுகிறது.
நம்மை விட்டு தூரத்தில் இருக்கும் உறவுகளோடு Video Call மூலம் பேசி மகிழவும் உதவுகிறது.
சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கிற்கு மட்டும் இல்லாமல் நமக்கு தேவையானதையும் தெரிய உதவுகிறது.
தீமைகள்:
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆபாச புகைப்படம் வீடியோஸ் ஆகியவை பரப்பப்படுகிறது. இதனால் இளம் வயதில் உள்ளவர்களுக்கு சலனம் உண்டாக்குகிறது.
பெண்களிடம் சிலர் இணைய தொடர்பு கொண்டு பேசி பழகி அவர்களை ஏமாற்றி அவர்களிடன் பணம் கேட்டு மிரட்டும் செயலும் நிகழ்கிறது.
சிலர் நாள் முழுக்க சமூக வலைத்தளங்களையே பயன்படுத்தி தனது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தாமல் நேரத்தை வீணடித்து வருகிறார்கள்.
இதுபோல பொய்யான ஒரு ID மூலம் ஒருவரின் வங்கி கணக்குகளை அறிந்து அவற்றை Hack செய்து அவர்களின் பணத்தை திருடுவது போன்ற செயல்களும் நடக்கிறது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம் ஆனால் அதற்கு அடிமையாகிவிடாமல் தேவைக்காக மட்டுமே எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும்.
