தலை முதல் கால் வரை அழகு குறிப்புகள்..!
வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களின் மீது சிறிது நேரம் வைத்திருந்து மின் எடுக்க, கண்களில் உள்ள சோர்வு நீங்கி கண்களின் கருவளையமும் மறையும்.
தினமும் முகத்தை ஐந்து அல்லது ஆறு முறை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகும். மேலும் அழுக்குகள் தங்காது.
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க, வாரம் ஒரு முறை ஆவி பிடித்து வர வேண்டும்.
சருமத்தை பொலிவடையச் செய்யும் ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, மாம்பழம், எலுமிச்சை, திராட்சை ஆகியவற்றை கூழாக்கி முகத்தில் தடவி வர முகம் பொலிவடையும். மார்கெட்டில் விற்கும் கண்ட பொருட்களை பயன்படுத்துவதைக் காட்டிலும் இத்தகைய இயற்கையான பழங்களை பயன்படுத்தி வரலாம்.
தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி அதனை தலையில் தடவி முப்பது நிமிடங்களுக்கு ஊற வைத்து குளித்து வர தலைமுடி அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி அதிகமாகவும் இருக்கும். குறிப்பாக இரவில் தடவி காலையில் குளிப்பது நல்ல பலனைத் தரும்.
சருமத்திற்கு லோசன்கள் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்துவதை காட்டிலும் சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைக்கலாம்.
எலுமிச்சை பழச்சாறுடன் தயிர் கலந்து தலையில் தடவி ஊறவைத்து குளித்து வர தலை சுத்தமாகவும் பொடுகின்றியும் காணப்படும். இதனால் கூந்தல் உதிர்வு கட்டுப்படும்.
கை மற்றும் கால்களில் வளரும் முடியினை அகற்ற நாம் கடைகளில் சென்று வாக்ஸிங் என்ற வலி நிறைந்த ஒரு தீர்வை செய்கிறோம் ஆனால் இதற்கு மாற்றாக சிம்பலா கடுகு எண்ணெய் தினமும் தொடர்ந்து தடவி குளித்து வர கை மற்றும் கால்கள் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.