கம்மி பட்ஜெட்டில் விமான டிக்கெட் புக்கிங் செய்ய..! இதை ட்ரை பண்ணுங்க..!!
விமானத்தில் பயணம் செய்ய ஆசையா..? ஆனால் டிக்கெட்களின் விலையை பார்த்து ஷாக் ஆக்குறீங்களா. இனி கவலை வேண்டாம்.
மலிவான விமான டிக்கெட்டுகளை வாங்க இந்த medhod ட்ரை பண்ணி பாருங்க…
முதலில் நாம் எந்த நாட்களில் புக்கிங் செய்கிறோம் என்பது முக்கியம்.. அப்படியாக செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் புக்கிங் செய்யலாம்.
பெரும்பாலான விமான நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை மாலை 7:00 மணிக்கு தங்கள் முன்பதிவு அமைப்புகளை அமைக்கின்றன. ஏனென்றால், பெரும்பாலான பயணிகளுக்கு வார நாட்களில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் கிடைக்கும் என்பது விமான நிறுவனங்களுக்குத் தெரியும்.
புள்ளி விவரங்களின் படி, பெரும்பாலான பயணிகள்., வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே டிக்கெட்டுக்களை புக்கிங் செய்கிறார்கள்..
ஒரு பயண டிக்கெட்டை புக்கிங் செய்யும் போது, அனுபவத்தின் அடிப்படையில் புக்கிங் செய்ய வேண்டும். அதாவது பயணத் தேதிக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கலாம்.
ஒரு சில விமான நிறுவனங்கள் முடிந்தவரை அதிக டிக்கெட் விற்பனையை அடைய தங்கள் அமைப்புகளை கொண்டுள்ளது. எனவே, கணினி மிகவும் மலிவான டிக்கெட்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அமைப்பில், கோலாலம்பூரில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களுக்கு, முதல் 20 பயணிகளுக்கு மட்டுமே குறைந்த விலை கிடைக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 200 பயணிகளுக்கு நடுத்தர விலை கிடைக்கும், மீதமுள்ளவை அதிக விலை கொண்டதாக இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்குப் பறக்கும்போது அவர்கள் விரும்பும் மார்ஜின் அடிப்படையில் விமானச் சேவையின் அமைப்பு டிக்கெட் விலையை நிர்ணயிக்கும்.
முன்பதிவு அமைப்பு மற்றும் விமான நிலையங்கள் மிகவும் பிஸியாக இருக்கும் போது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் ஒப்பிடும்போது இந்த இரண்டு நாட்களில் விமான நிலையங்களும் பொதுவாக குறைவாகவே இருக்கும்.
சர்வதேச விமானங்களுக்கான “சிறந்த ஒப்பந்தத்தை” (platform) தேர்ந்தெடுப்பது
ஒரு சில விமான நிறுவனங்கள் சர்வதேச விமானங்களுக்கு 11 முதல் 12 வாரங்களுக்கு முன்னதாகவே சிறந்த ஒப்பந்தம் (Special Offer) கொடுக்கும்..
அந்த சமயத்தில் டிக்கெட் விலையை சரிபார்த்து புக்கிங் செய்யலாம்.. சிறிய விமான நிலையங்களில் தரையிறங்க தேர்வு செய்யவும்
சில சமயங்களில் அதே விமான நிறுவனத்திலிருந்து மலிவான டிக்கெட் விலைகளைக் காணலாம். பயணத்திற்கு அடிக்கடி பயன்படுத்தப் படும் சில google Search Platform’s
1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software
இனி இந்த முறைப்படி விமானடிக்கெட்களை புக்கிங் செய்து பாருங்க.. உங்க பணத்தை save பண்ணுங்க…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..