பெண்களுக்கான அழகு குறிப்புகள்..!
கருவளையம் நீங்க சந்தனத்தில் பன்னீர் சேர்த்து கலந்து இரவில் கண்களின் கீழ் தடவி காலையில் கழுவலாம்.
கரும்புள்ளி மறைய தக்காளியை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காயவிட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
முகப்பருக்கள் மறைய பப்பாளி மரத்தில் வரும் பாலை சேகரித்து அதில் சிறிது சீரகம் போட்டு அப்படியே கால் மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் முகப்பரு உள்ள இடத்தில் தடவி வர முகப்பரு இருந்த இடமே தெரியாது.
சரும நிறம் பொலிவாக உலர்ந்த ரோஜா இதழுடன் சிறிது பன்னீர் மற்றும் சந்தனம் கலந்து அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் கூடும்.
மஞ்சளுடன் வேப்பிலை கலந்து அரைத்து முகத்தில் இருக்கும் பருக்களில் பூசி வர பருவில் சீவு பிடிக்காது, விரைவாக சரியாகிவிடும்.
முகம் பளபளப்பாக பால் காய்ச்சும்போது அந்த ஆவியில் முகத்தை காட்டி அதில் வரும் வியர்வையை துடைக்காமல் அப்படியே காயவிட்டால் முகம் பளபளப்பாகும்.
முகத்திலிருக்கும் முடி உதிர வேப்பங்கொழுந்து, குப்பமேனி இலை, விரலி மஞ்சள் ஆகியவற்றை அரைத்து இரவில் தடவி மறுநாள் கழுவி வரலாம்.
கற்றாழையில் இருக்கும் ஜெல்லை முகத்தில் தடவி காயவிட்டு கழுவி வர சரும அழுக்குகள் நீங்கிவிடும்.