திருப்பத்தூர் நாச்சியம்மன் கோவில் திருவிழா நிறைவு..
திருப்பத்தூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற நாச்சியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலும் ஏப்ரல் 25ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது, அதில் ஏராளமான பக்தர்களும், ஊர் மக்களும் கலந்து கொண்டு தேரை இழுத்துள்ளனர்.
ஏப்ரல் 26ம் தேதி மாலை 3மணிக்கு, நாச்சி அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக, பக்தர்கள் காப்பு கட்டி. பால்குடம், வேல் குத்துதல், முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து, நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அன்று மாலை 6மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூப்பல்லாக்கில் வீதி உலா வந்தார். கிராம மக்கள் அனைவரும் தீபாராதனை செய்து வழிபட்டனர். 26ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து மறுநாள் காலை 10:30 மணிக்கு கோவிலை வந்து அடைந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெற்று, திருவிழா முடிவடைந்தது.
Discussion about this post