திண்டிவனம் கெங்கையம்மன் திருக்கல்யாணம்..!
திண்டிவனம் கெங்கையம்மன் கோவிலில் கடந்த மே 23ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அன்று காலை சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தால், திருமணம் ஆகதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்குமாம்.
மேலும் திருமணம் ஆனவர்கள் வந்து வேண்டிக்கொண்டு இங்கு தரும் மஞ்சள் கயிறை தாலியில் கோர்த்தால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்குமாம். எனவே ஏராளமான பெண் பக்தர்கள். இத் திருக்கல்யாணத்தில் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post