ADVERTISEMENT
ரூபாய் 2,500 க்கு மேல் பட்டாசு வாங்கினால் பரிசாக பைக், டிவி, மிக்சி, வெள்ளி நாணயங்கள்!!!
பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னிலைப்படுத்தி, நண்பர்கள் குழு நடத்திய பட்டாசு கடையில் குலுக்கல் முறையில் தீபாவளி பரிசு மழையில் பைக் ,டிவி, மிக்ஸி போன்றவை பரிசாக வழங்கபட்டது.
பண்டிகை கால விற்பனையில், பொருட்களை விற்க வழக்கமாக தள்ளுபடி பரிசு மழை அறிவிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கோவையில் தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்கப்பட்டது . வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால், அவர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தீபாவளி பரிசாக பைக், டிவி, மிக்சி, வெள்ளி நாணயங்கள் தீபாவளி பரிசாக தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து தற்காலிக பட்டாசு கடை நடததிய நண்பர்கள் குழுவில் இருந்த ஆறுச்சாமி கூறுகையில், குறைந்த ஊதியத்தில் உழைக்கும் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள், கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
வருடத்தில் ஒரு நாள் பண்டிகையை முன்னிட்டு ஒரு வருடம் முழுவதும் உழைக்கும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு தோல்வின்றி இருக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை அதிகரிப்பின் மூலம் பட்டாசு தொழிலாளர்களுக்கு கூடுதலான ஆஃபர் கிடைக்கும் என்பதனால், பட்டாசு விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் தள்ளுபடியுடன் பரிசு அறிவித்து நண்பர்கள் குழு தற்காலிக பட்டாசு கடை அமைத்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.