ADVERTISEMENT
அங்கன்வாடி மையத்தின் முன்பு கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சிவாயல் கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
இக்குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் இன்னும் ஊராட்சிமன்ற அலுவலகத்திடம் கட்டிடத்தை ஒப்படைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பயில்வதற்கு விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறி கொட்டும் மழையில் அப்பகுதி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பெண்கள் அங்கன்வாடி மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.