ஆடி கிருத்திகை முருகனின் அருள் கிடைக்க இந்த வழிபாடு அவசியம்..!!
இன்று ஆடிக்கிருத்திகை முருக பெருமானுக்கு மிகவும் உகுந்த நாள்.., ஆடி கிருத்திகை எதனால் கொண்டாடப்படுகிறது. ஆடிக்கிருத்திகை என்ன வழிபாடு அவசியம் என்பதை இந்த தகவலில் பார்க்கலாம்.
கிருத்திகை : சிவ பெருமானின் நெற்றி கண்ணில் இருந்து மற்றொரு அவதாரமாக முருகர் பிறந்தார். அவரை பாதுகாப்பதற்காக ஆறு பெண்கள் இருந்தனர்.., அவர்களை கார்த்திகை பெண்கள் என்று தான் அழைபார்க்கலாம். முருகரும் கார்த்திகை பெண்கள் மீது அதிக அன்போடு இருந்துள்ளார். முருகரை கார்த்திகை பெண்கள் பத்திரமாக பார்த்துக்கொண்டதால் சிவ பெருமான் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திகை பெண்கள்.., நாங்கள் எப்பொழுதும் இதே மாதிரி முருகருக்கு அடியாளாக இருந்து சேவை செய்தால் போதும் என கேட்டுள்ளனர். சிவ பெருமானும் அவர்களின் ஆசைக்கு இணங்க என் மகனை நீங்கள் கவனித்து கொண்டதால் உங்களையும் இனி மக்கள் வணங்குவார்கள்.
இன்று முதல் நீங்கள் கார்த்திகை பெண்களாக முருகருடன் இருப்பீர்கள்.., உங்களை போற்றும் விதமாக கிருத்திகை என்ற நாள் வழிபாடு நாளாக அவகரிக்கப்படும் என்ற வரத்தை.., கார்த்திகை பெண்களுக்கு அளிக்கிறார். எனவே இந்த கார்த்திகை நாளில் முருகர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் முக்கியமாக அசைவ உணவு சாப்பிட கூடாது.
அதிலும் பரணி நட்சத்திரம், அசுவினி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் கட்டாயம் முருகர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் வெற்றி கிடைக்கும். தடைபட்ட செயல்கள் கை குடுக்கும். மற்ற பக்தர்களும் சென்று இந்த நாளில் முருகரை வணங்கலாம்.., ஆனால் பரணி நட்சத்திரம், அசுவினி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இருப்பவர்கள் வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
இன்று காலை முதல் மாலை 6 மணி வரை நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொள்ளவும்,
காலை மற்றும் மாலை தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்,
இரு வேளையும் கந்தசஷ்டி கவசம் ஒலிக்க வேண்டும்,
முடிந்த வரை மதியம் வேளையில் முருகருக்கு ” சாப்பாடு, சாம்பார், முருங்கை கீரை பொரியல், வடை, பாயசம்” என சமைத்து படையல் இட்டு வழிபடலாம்,
இப்படி வழிபட்டால் முருகரின் அருள் கிடைக்கும்.., வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் விலகி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..