ஆடிக் கிருத்திகையில் முருகனுக்கு பிடித்த பிரசாதம்..!
தேவையான பொருட்கள்:
திணை 1 கப்
தேன் 2 ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
முந்திரி,திராட்சை,ஏலக்காய் தூள்,
சுக்கு பொடி
செய்முறை:
முதலில் திணையை நன்றாக நீரில் சுத்தம் செய்து 1 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின் துணியை கொண்டு நீரை வடிக்கட்டி பின் அதனை ஒரு வாணலில் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின் ஆறவைத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்கு பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் முந்திரி,திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து அதில் அரைத்த திணை மாவை சேர்த்து அதில் தேன் போட்டு நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் தேனும் திணையும் தயார். தேவைப்பட்டால் இன்னும் தேன் சேர்த்து லட்டு பதத்திற்கு பிடித்துக் கொள்ளலாம்.
இந்த தேனும் திணையும் தான் முருகனுக்கு ரொம்ப பிடித்தமான உணவு.
Ingredients Thinai – 1 small cup ( 100 gm) Honey – 3 tbs Ghee – 1 tsp Cashew, dry grapes, cardamon powder, dry ginger powder. Steps Wash and soak Thinai for 1 hour. Filter the water, put in a towel for 15 minutes. Dry roast it for 2 minutes, until you get nice aroma and it started pops. Transfer to dry mixie jar, after 10 minutes grind it to a smooth powder. Add 1/4 tsp of cardamom powder, 1/4 tsp of dry ginger powder. Fry Cashew, dry grapes in ghee., switch off, add grinded thinnai and give a good mix. Keep it aside for 10 minutes. Add honey and mix. It will be like a puttu consistency. If you want you can add more honey and make laddus. Instead of hole Thinai, if you get Thinai flour,.. Dry roast it for 3,4 minutes, and then you can do the same process..