பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்த பரிகாரம் சிறந்தது..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, குடியாத்தம் அருகே புகழ்பெற்ற பிந்து மாதவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பிரமஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட இத்திருத்தலம் சிறந்தது. எப்படி வழிபட வேண்டும். வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
பிந்து மாதவ பெருமாளுக்கு தொடர்ந்து ஐந்து வாரம் வழிபட்டு செய்து வர வேண்டும். பின் ஆறாவது வாரம் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி, துளசி அர்ச்சனை செய்தால் கல்வி அறிவில் பின் தங்கி இருப்பவர்களுக்கு.., கல்வி அறிவு அதிகரிக்கும்.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், இத் திருதலத்தில் உள்ள நாக கன்னிகைகளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாங்கல்யம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாக கன்னிகைக்கு நெய் தீபம் ஏற்றி, ஏழுமுறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். பின் பிந்து மாதவரை சென்று வணங்கினால் தோஷம் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி