வினேஷ் போகத் கூடுதல் எடைக்கு காரணம் இதுதான்..!!
ஒலிம்பிக்கில் கூடுதல் எடை காரணமாக நிராகரிக்கப்பட்ட வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு விசாரணை நேற்று நடைபெற்றது.
கடந்த மாதம் ஜூலை 6ம் தேதி அன்று இரவு நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தத்த போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவு போட்டி நடைபெற்றது. அதன் அரை இறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன், வினேஷ் போகத் போட்டியிட்டனர்..
இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட “வினேஷ் போகத்” முதல் நிமிடத்திலேயே யூஸ்னிலிஸ் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.. அதனால் அவர் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறினார். அதன் மூலம், வெள்ளிப் பதக்கம் உறுதி செய்ய்யப்பட்டது.
50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்துள்ளது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான மனு விசாரணை இரண்டு நாட்களாக நடத்தப்பட்டது. அதில் வினேஷ் போகத் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பார்க்கலாம்.
ஒலிம்பிக்கில் பங்கேற்றப்பதற்காக அறிவிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 100 கிராம் எடை குறைவாக இருப்பதால் ஒரு வீராங்கனையின் உடல் எடையில் அது 0.2 சதவீதம் மட்டுமே. வெயில் காலத்தில் இருக்கும் மனிதனின் எடையானது சில செயல்பாட்டின் காரணமாக அதிகரிக்கும். மேலும், அவர் போட்டியில் பங்கேற்பதற்காக கூட ஆரோக்கிய உணவுகள் எடுத்திருக்கலாம் அதனால் கூட அவரது உடலில் அதிக சதை சேர்ந்திருக்கலாம்.”
அவர் ஏமாற்று வதற்காகவோ, மற்ற வீராங்கனைக்கு எதிராக முன்னிலை பெறுவதற்காகவோ இதை செய்யவில்லை. ஆனால், தற்போது அவர் தனது கடினமான முயற்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பின் அவரை தகுதி நீக்கம் செய்வது என்பது சரியல்ல. அவருக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும். அதை அவர் அவரது கடின முயற்சியால் தான் வென்று இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவரது சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஆகஸ்ட் 13 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..