இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் இனி இவர் தான்.. யார் இவர்..?
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக “ஜெயா வர்மா சின்ஹா” இன்று பொறுப்பேற்றார்.
இந்திய ரயில்வேயின் 166 ஆண்டு கால வரலாற்றில், ரயில்வே வாரிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் “ஜெயா” முதல் பெண் அதிகாரி என்ற பெருமை இவரையே சேரும்.
ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக “ஜெயா வர்மா சின்ஹாவை” மத்திய அரசு நியமானம் செய்துள்ளது. தற்போது ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்று இருக்கும் இவர் இன்று முதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அனில்குமார் லகோட்டியின் பதவிக்காலம் நேற்று முடிவடைந்ததால். ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு உறுப்பினராக இருக்கும் “ஜெயா வர்மா சின்ஹாவை” புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மத்திய அரசு நேற்று நியமித்தது.
இதற்கு முன் “ஜெயா வர்மா சின்ஹா“ 4 ஆண்டுகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக பணியாற்றினார். அந்த சமையம் கொல்கத்தா – டாக்கா இடையிலான மைத்ரி எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
Discussion about this post