ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த 14 வயது மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த பெரிய பாலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமு. இவருக்கு வயது 14. இவர் ஃப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி நாள்தோறும் விளையாடியப் படியே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் மும்மரமாக விளையாடிக் கொண்டிருந்தார். இறுதியில் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவவே மனமுடைந்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிறுவன் தாமு மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொண்டான். மகனை வெகுநேரமாகியும் காணததால் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து வேலூர் தாலுக்கா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.