சூரியன் ஆய்விலும் தமிழர்தான்.. ஆதித்யா எல்-1 திட்டத்தில் தென்காசி பெண்..
விண்ணிற்கு செல்ல காத்திருக்கும் “ஆதித்யா எல்-1” விண்கலத்தில் திட்ட இயக்குனராக தென்காசி பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி இருக்கிறார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 ஜூலை 23 ம் தேதி அன்று அனுப்பப்பட்டு ஆகஸ்ட் 23ம் தேதியன்று நிலவில் தரையிறங்கியது. தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி உள்ளார். நிகர் ஷாஜி திருநெல்வேலி செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம். பள்ளிக்கூடத்தில் படித்தவர் படிக்கும் பொழுது +2 தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தவர்.
பின் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்து விட்டு மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டி டியூட்டில் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று, இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்துள்ளார்.
ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால் இப்போது இந்தியாவிற்காக பணியாற்ற இருப்பது மிகவும் பெருமையான ஒன்று என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post