மஹாராஷ்டிராவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. மண மகள்களின் முடிவால் மாப்பிளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் என்ற மாவட்டத்தில் பிங்கி, ரிங்கி என்ற இரட்டை சகோதரிகள் பிறந்ததிலிருந்து ஒன்றாக இருந்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத்தில் பட்ட படிப்பை இருவரும் ஒன்றாக முடித்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பிறந்ததிலிருந்தே ஒன்றாக வளர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டால் இருவரையும் பிரித்து விடுவார்கள் என்று விசித்திரமான சிந்தனை வந்துள்ளது இதனால் இருவரும் வித்தியாசமான ஒரு திட்டத்தை போட்டுள்ளனர். அதாவது வேறு வேறு நபரை திருமணம் செய்தல் தானே பிரிவு வரும் ஒரே நபரை திருமணம் செய்தால் எப்படி பிரிக்க முடியும் என்று யோசித்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு அதுல் உத்தம் என்ற நண்பர் உள்ளார் இவர் டிராவல் ஏஜென்சி நடத்திவருகிறார். சிறு வயதிலிருந்து நண்பரான இவர் ரிங்கி பிங்கி குடும்பத்திற்கு துணையாக இருந்துள்ளார். இதனால் இரட்டை சகோதரி இருவருக்கும் அவரை பிடித்து போனதால் அவரை திருமணம் செய்ய இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இரு குடும்பங்களும் சம்மதித்ததால் இரட்டை சகோதரிகள் அதுல் உத்தம்மை திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஒருக்கட்டத்தில், சமூக சேவகர் ராகுல் என்பவர் அதுல் உத்தம் மீதும் இந்த திருமணத்தின் மீதும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனை வழக்கு பதிவு செய்த காவல்துறைக்கு சட்டத்தை மீறி இரண்டு பேர் ஒரே வாலிபரைத் திருமணம் செய்தது குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநிலப் பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலி சோலாப்பூர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் புதுமாப்பிள்ளை தற்போது காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பிங்கி, ரிங்கி ஒன்றாக இருக்க வேண்டும் எடுத்த இந்த முடிவிற்கு காவல் துறை அதுல் உத்தம்னை மட்டும் விசாரித்து வருவதால் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசபட்டு வருகிறது.