டேஸ்டியான சிக்கன் மலாய் கோஃப்தா வீட்ல செய்து அசத்துவோமா..!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 250 கிராம்
பெரிய வெங்காயம்- 3
பெரிய தக்காளி- 2
பச்சை மிளகாய்- 1
பூண்டு- 10பல்
மல்லி தூள்- 2ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
கரமசாலா- 1 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு- தேவையானஅளவு
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு- 20
பாதாம் பருப்பு- 10
ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்
சோம்பு- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- தேவையானஅளவு
தயிர்- ஒரு கப்
செய்முறை:
சிக்கனை நன்றாக மூன்று முறை கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்சிக்கனோடு உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை போட்டு பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொண்டு ஆற வைத்து பின் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துவிட்டு அது பச்சை வாசனை போகும்வரை வதக்கிய பின் அதில் முன்பு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்க வேண்டும்.
பின் அத்துடன் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்துவிட்டு கலந்துவிட வேண்டும் பின் அதில் பொறித்து வைத்திருக்கும் சிக்கன் உருண்டைகளை சேர்த்து சிறிது கொதிக்க வைத்து இறக்கினால் டேஸ்டியான சிக்கன் மலாய் கோஃப்தா தயார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
