இறந்தபின் தாடை மற்றும் கண்கள் திறந்தவாறு இருப்பது ஏன்..?
மனித உடல் ஒரு இயந்திரம் ஆகும். இதில் இருக்கும் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று செயல்பட்டு மனித உடலை உயிருடன் செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறது. நம் உயிர் உடலில் இருக்கும் வரை தொடர்ந்து வேதி வினைகள் நடைபெற்று கொண்டேதான் இருக்கும்.
இது உணவு மற்றும் சுவாசிக்கும் காற்று வழியாக செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இறப்பு என்றால நமது உடல் முற்றிலுமாக செயல்படாமல் போதல் ஆகும். இதற்கு மூளை செயலிழத்தல், இதயத்துடிப்பு நின்றுபோதல் ஆகியவை இடம்பெறும்.
மனிதன் இறந்து 25 நிமிடங்களில் அந்த உடலின் தாடை தசை மற்றும் கண்கள் இறுகி திறந்த நிலைக்கு வரும். இறந்து மூன்று மணி நேரத்தில் கால் மற்றும் கை தசைகளும் இறுகிவிடும்.
மனித உடல் இறந்துபோய் 12 மணி நேரத்தில் உடம்பில் இருக்கும் அனைத்து தசைகளும் இறுகிபோய்விடும். இதற்கு காரணம் மரணம் அடைந்ததும் உடலில் ரத்த ஓட்டமானது தடைப்பட்டு தசைகளில் நார்கள் திறந்த நிலையை அடைவதாகும்.
உடலில் இந்த நிகழ்வை வைத்து தான் மரணம் எப்போது நடந்திருக்கும் என கணக்கிட உதவியாக இருக்கிறது. விசாரணைகளில் இது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும்.